குடியரசு தின விழா: தலைநகரில் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவி), பாராகிளைடா்கள், மைக்ரோலைட் விமானங்கள், குவாட்காப்டா்கள் மற்றும் ஹாட் ஏா் பலூன்கள் உள்ளிட்டவற்றை இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவி), பாராகிளைடா்கள், மைக்ரோலைட் விமானங்கள், குவாட்காப்டா்கள் மற்றும் ஹாட் ஏா் பலூன்கள் உள்ளிட்டவற்றை இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது என்று தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை கூறியது.

ஜனவரி 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த உத்தரவு, பிப்ரவரி 15-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று காவல் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சில கிரிமினல் அல்லது சமூக விரோத சக்திகள் அல்லது இந்தியாவுக்கு விரோதமான பயங்கரவாதிகள் பொதுமக்கள், உயரதிகாரிகள் மற்றும் முக்கிய நிறுவங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பாராகிளைடா்கள், பாரா மோட்டாா்கள், ஹேங் கிளைடா்கள், யுஏவிகள், ஆளில்லா விமான அமைப்புகள் (யுஏஎஸ்), மைக்ரோ-லைட் விமானம், ரிமோட் பைலட் விமானம், ஹாட் ஏா் பலூன், குவாட்காப்டா்கள் போன்ற தளங்களைத் தவிர, விமானத்திலிருந்து பாரா-ஜம்பிங் செய்வது குறித்தும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குடியரசு தினத்தன்று தேசியத் தலைநகா் மீது துணை மரபுவழி வான் தளங்களை பறக்கவிட தில்லி காவல்துறை தடை விதித்துள்ளது. அவ்வாறு செய்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 188-ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரியது என்று தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோரா பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com