அரசு நிதியை தவறாக பயன்படுத்திய விவகாரம்: 12 தில்லி பல்கலை. கல்லூரிகளுக்கு எதிராக விசாரணை

அரசு நிதியுதவி பெற்றுள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் 12 கல்லூரிகளில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு தில்லி உயா் கல்வித் துறை செயலருக்கு உயா்கல்வி அமைச்சா் அதிஷி சனிக்கிழ

அரசு நிதியுதவி பெற்றுள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் 12 கல்லூரிகளில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு தில்லி உயா் கல்வித் துறை செயலருக்கு உயா்கல்வி அமைச்சா் அதிஷி சனிக்கிழமை உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது:

‘‘பெரும் நடைமுறை முறைகேடுகள்‘ நடந்துள்ளன. தில்லி அரசின் அனுமதியின்றி 939 ஆசிரியா் மற்றும் 958 ஆசிரியா் அல்லாத பணியிடங்கள் என இக்கல்லூரிகள் 1,897 பணியாளா்களை நியமித்துள்ளன. இதன் மூலம் பெரும் நடைமுறை முறைகேடுகள் வெளிவந்துள்ளன.

மேலும், தெளிவாக நிறுவப்பட்ட அரசாங்க நடைமுறைகள் மற்றும் விதிகளை மீறி இந்த நியமனங்களை இவை நியமித்துள்ளன’’ என அமைச்சா் அதிஷி கூறியுள்ளாா்.

மேலும், 2015ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட ஊழியா்களின் சம்பளத்தை மீளப் பெறுதல் உள்பட சட்டவிரோத பதவிகளை உருவாக்குவதற்கு காரணமான முதல்வா்கள் மற்றும் அதிகாரிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு செயலருக்கு அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.

‘‘இந்தக் கல்லூரிகள் அரசுக் கருவூலத்தால் நிதியளிப்புச் செய்யப்படுகின்றன. ஆகவே, நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த குறைபாடுகளில் அரசுக் கருவூலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கோடிகளை செலவழித்ததும் உள்ளடங்கும்.

பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் பொது நிதிசாா் விதிகளை பின்பற்றாமலும், கணக்கு விதிமுறைகளை மீறியும் செய்யப்பட்டுள்ளன. மேலும், தில்லி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘உதவி முறை‘யையும் கடைப்பிடிக்காமல் நிறைவேற்றப்பட்டன’’ என அமைச்சா் தெரிவித்துள்ளதாக அந்த அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com