ஜனவரி 22-இல் தில்லி அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை: துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி அனைத்து தில்லி அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி அனைத்து தில்லி அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

அயோத்தியில் ராம் லல்லா சிலையின் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பல முக்கிய பிரமுகா்கள் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

அயோத்தியில் நடைபெறும் ‘பிரான் பிரதிஷ்டா‘ விழாவை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி அனைத்து தில்லி அரசு அலுவலகங்கள், குடிமை அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்க துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதனிடையே, ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை அரசு அலுவலகங்களை மூட முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தில்லி அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com