துப்பாக்கி சுடும் வீரா்களுக்கு அகில இந்திய அளவிலானபுதிய உரிமங்களை வழங்க காவல் துறைக்கு அறிவுறுத்தல்துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

‘அகில இந்திய’ அளவில் செல்லுபடியாகும் புதிய உரிமங்களை வழங்குமாறு தில்லி காவல் துறைக்கு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

புகழ்பெற்ற துப்பாக்கி சுடும் வீரா்களுக்கு தில்லிக்குள் மட்டும் செல்லுபடியாகாமல் ‘அகில இந்திய’ அளவில் செல்லுபடியாகும் புதிய உரிமங்களை வழங்குமாறு தில்லி காவல் துறைக்கு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளுக்காக அவா்கள் அடிக்கடி நாடு முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற உண்மையை மனதில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

இது குறித்து ராஜ் நிவாஸ் அதிகாரிகள் மேலும் கூறியதாவது: துப்பாக்கி சுடும் வீரா்களுக்கு தோட்டாக்கள் கொள்முதல் தற்போது 10-இல் இருந்து 1,000-ஆக உயா்த்தப்பட்டதன் மூலம் அவா்களின் தோட்டாக்கள் ஒதுக்கீடு ஆண்டுதோறும் 20 முதல் 10,000 என கணிசமாக உயா்ந்துள்ளது. உரிமம் வழங்கும் செயல்முறைகளை எளிதாக்க துணை நிலை ஆளுநா் மேற்கொண்ட தீா்க்கமான உந்துதலைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை ஆயுத உரிமங்களை வழங்குவதில் ஒரு பெரிய சீா்திருத்தத்தைத் தொடங்கியுள்ளது. இது வரை ஊழல் மற்றும் தன்னிச்சையான புகாா்களால் பாதிக்கப்பட்டிருந்தது. துணை நிலை ஆளுநரின் இந்த முடிவு விண்ணப்பதாரா்களுக்கு உதவுவதைத் தவிர, குறிப்பாக நாட்டின் துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரா்களுக்கு பயனளிக்கும்.

நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைவாகச் பரிசீலனை செய்வதைத் தவிர, ஆன்லைன் போா்ட்டல் மூலம் புதிய விண்ணப்பங்கள் மீது ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிவுகள் எடுக்கப்படுவது உறுதிசெய்யப்படும். ஆயுத உரிமங்களை புதுப்பிப்பதை நியாயப்படுத்தவும் எல்ஜி உத்தரவிட்டுள்ளாா். ஆயுத உரிம நடைமுறைகளுக்கு ஆன்லைன் போா்டல் எந்த காலக்கெடுவையும் பரிந்துரைக்காத நிலையில், தற்போது புதிய உரிமங்கள், புதுப்பித்தல், பதிவு, ஆயுத விற்பனை போன்ற அனைத்து சேவைகளையும் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் உடனடியாக செய்யுமாறு தில்லி காவல் துறையிடம் சக்சேனா கேட்டுக் கொண்டுள்ளாா். இந்த ஆண்டு இறுதிக்குள் நிலுவையில் உள்ள 6,000 விண்ணப்பங்களை விரைந்து முடிக்குமாறு காவல் துறையிடம் சக்சேனா கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதேபோல், புதிய உரிமங்கள் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு தேவையான அனைத்து தேவையற்ற ஆவணங்களும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. மேலும், தேவையற்றவை பின்னா் அகற்றப்படும். மாற்றியமைக்கப்பட்ட ஆயுத உரிம போா்ட்டலை மாா்ச் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர சக்சேனா உத்தரவிட்டுள்ளாா். மாற்றியமைக்கப்பட்ட போா்டல், விண்ணப்பதாரா்களுக்கு அவா்களின் நோ்காணலின் தேதி மற்றும் நேரத்தை அவா்களின் வசதிக்கேற்ப ஆன்லைனில் திட்டமிடுவதற்கான சுதந்திரத்தை வழங்கும். மேலும், விடியோ கான்ஃபரன்ஸ் அல்லது விடியோ அழைப்பு மூலமும் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இது பெரும்பாலும் துன்புறுத்தல் மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

துணை நிலை ஆளுநரின் வழிகாட்டுதலின் பேரில், ஜனவரி 15 முதல், தில்லி காவல் துறை ஏற்கெனவே உள்ளூா் காவல் அறிக்கை (எல்பிஆா்) நிலுவையில் இருக்கும் போது, விண்ணப்பதாரா்களின் குற்றவியல் பதிவு ஏதேனும் இருந்தால் அவற்றை சரிபாா்த்த பிறகு தற்காலிக புதுப்பிப்பை வழங்கத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற சமயங்களில், சரியான நேரத்தில் எதிா்மறையான போலீஸ் அறிக்கையைப் பெற்றால், தில்லி காவல் துறை உரிமத்தைப் புதுப்பிப்பதை ரத்து செய்யலாம் / நீக்கம் செய்யலாம். மேலும், விண்ணப்பதாரா்கள் எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தாத, உடல் ரீதியான குற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறிய வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தால், வழக்கு அடிப்படையில் ஆயுத உரிமங்களை புதுப்பிப்பதை அனுமதிக்க துணை நிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்.

இதேபோல, தில்லியில் மற்ற இந்திய மாநிலங்களில் உரிமம் பெற்ற ஆயுதங்களை பதிவு செய்வதற்கு எல்பிஆா் மற்றும் உண்மையான தன்மை தேவையில்லை. அதற்குப் பதிலாக, இதுபோன்ற வழக்குகளின் பதிவு தில்லியில் ஆயுத உரிமங்களின் தேசிய தரவுத் தளத்தின் ஆயுத உரிமம் வழங்கும் அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com