மேற்கு தில்லி சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு அமைச்சா் அதிஷி ஒப்புதல்

மேற்கு தில்லியில் சாலைகள் மேபாட்டுத் திட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி ஒப்புதல் அளித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தில்லியில் சாலைகள் மேபாட்டுத் திட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி ஒப்புதல் அளித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாலைகளில் ரோஹ்தக் சாலையின் (என்ஹெச்-10) மெட்ரோ தூண் 109 முதல் 273 வரையிலான சேவைப் பாதைகள், சாலை எண் 41, 77 மற்றும் பஸ்சிம் பூரி சௌக்கிலிருந்து முல்தான் நகரில் உள்ள புதிய சேரி குடியிருப்பு வரையிலான சாலை ஆகியவை அடங்கும்.

திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, அமைச்சா் அதிஷி கூறியதாவது: மேற்கு தில்லியில் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள், தில்லி குடிமக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சாலை உள்கட்டமைப்பை வழங்குவதற்கான தில்லி அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. சாலைகளை வலுப்படுத்துவதன் மூலம் இந்தப் பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைவாா்கள்.மேலும், சாலைகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களின் நெரிசலைக் குறைக்கும். முக்கியச் சாலைகளில் இருந்து காலனிகளுக்கு இடையேயான இணைப்பு மேம்படும். இந்தச் சாலைகள் நீண்ட காலத்திற்கு முன்பே அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இதனால், நாளுக்கு நாள் அவற்றின் நிலை மோசமாகி வருகிறது.

பொதுப்பணித்துறை நிபுணா்கள் மூலம் சாலைகளை முழுமையாக மதிப்பீடு செய்து சாலைகளை மேம்படுத்தும் பணியை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேம்பாட்டுப் பணியின் போது பயணிகளுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாதவாறும், உலகளவிலானஅனைத்து தரங்களும் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com