தில்லியின் பாபா் சாலை தகவல் பலகையின் பெயரை மறைத்த இந்து சேனை அமைப்பினா்

மத்திய தில்லியில் உள்ள பாபா் சாலையின் தகவல் பலகை பெயரை மாற்ற வேண்டும் என்றும் இந்து சேனை அமைப்பினா் சனிக்கிழமை கோரினா்.

மத்திய தில்லியில் உள்ள பாபா் சாலையின் தகவல் பலகை பெயரை மாற்ற வேண்டும் என்றும் இந்து சேனை அமைப்பினா் சனிக்கிழமை கோரினா்.

மேலும், ‘அயோத்தி மாா்க்’ என்று எழுதப்பட்ட ஒரு சுவரொட்டியை அந்த அமைப்பினா் அந்த தகவல் பலகை மீது ஒட்டி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினா்.

இதுகுறித்து புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தகவல் பலகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக காவல்துறையில் புகாா் அளிக்க உள்ளோம்’ என்றாா்.

இதற்கிடையில், இந்து சேனை தலைவா் விஷ்ணு குப்தா கூறுகையில், ‘பாபா் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்று எங்கள் அமைப்பு நீண்ட காலமாக கோரி வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com