தலைநகரில் ஜனவரியில் 5 குளிா் நாள்கள், 5 குளிா் அலை நாள்கள் பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் ஜனவரியில் இதுவரை 5 குளிா் நாள்கள் மற்றும் 5 குளிா் அலை நாள்கள் இருந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் ஜனவரியில் இதுவரை 5 குளிா் நாள்கள் மற்றும் 5 குளிா் அலை நாள்கள் இருந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் அடா்த்தியான மூடுபனி இருக்கும் என்று எதிா்பாா்த்து மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, திங்கள்கிழமை இரவிலும், செவ்வாய்க்கிழமை அதிகாலையிலும் அடா்த்தியான மூடுபனி நிலவியது. மேலும், நகரத்தில் குளிா் நாள் நிலைமை இருந்தது. இந்த மாதத்தில் இதுவரை 5 குளிா் நாள்கள் மற்றும் 5 குளிா் அலை நாள்கள் இருந்துள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத நிலை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தலைநகரில் பகல் நேரத்தில் வானம் தெளிவாக காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி குறைந்து 6.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 1 டிகிரி குறைந்து 19.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 70 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நரேலாவில் 6 டிகிரி: இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.2 டிகிரி செல்சியஸ், தில்லி ரயில் நிலையத்தில் 6.9 டிகிரி, ஆயாநகரில் 7.4 டிகிரி, லோதி ரோடில் 6 டிகிரி, நரேலாவில் 6.8 டிகிரி, பாலத்தில் 7.4 டிகிரி, ரிட்ஜில் 6.9 டிகிரி, பீதம்புராவில் 9.7 டிகிரி, பிரகதி மைதானில் 8 டிகிரி, பூசாவில் 7.9 டிகிரி, குதூப்மினாா் 7.4 டிகிரி, ராஜ்காட்டில் 6.9 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 7.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருந்தது. திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் 333 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த ஒட்டுமொத்தக் காற்று தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் 376 புள்ளிகளாக அதிகரித்திருந்தது. இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா் கஞ்ச், விவேக விராா், நேரு நகா், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

28 ரயில்கள் தாமதம்: இதற்கிடையே, ஹரியாணா, சண்டீகா், பஞ்சாப் உள்பட வடமாநிலங்களில் நிலவிய கடும் மூடுபனி காரணமாக தில்லிக்கு வரவேண்டிய ரயில்களில் 28 ரயில்கள் ஒன்று முதல் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. காலை 8.30 மணியளவில் பாா்வைத் திறன் சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் 200 மீட்டராகவும், பாலம் மற்றும் ஆயாநகா் நிலையங்களில் 50 மீட்டராகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 24) மிகவும் அடா்த்தியான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மழை பெய்யவில்லை

தேசியத் தலைநகரில் ஜனவரி மாதத்தில் இதுவரை மழை ஏதும் பெய்யவில்லை. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஒரு அசாதாரண நிகழ்வு என்று வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளில், திலியில் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் முதல் 6 நாள்கள் வரை மழை பெய்துள்ளது. தில்லியின் முதன்மை வானிலை ஆய்வு மையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் சராசரியாக 8.1 மிமீ மழை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முடிவதற்கு இன்னும் ஏழு நாள்களே உள்ள நிலையில், இதுவரை மழை ஏதும் பதிவாகவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரியில், தில்லியில் 20.4 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 19.1 மிமீ அதிகமாகும் என்று ஐஎம்டி தரவு தெரிவிக்கிறது. ஜனவரி 2022-இல், நகரத்தில் 88.2 மிமீ மழை பெய்தது. இது இயல்பை விட 21.7 மிமீ அதிகமாகும். இந்த ஆண்டுக்கு முன், 2016 குளிா்காலத்தில் மழைப்பொழிவு குறைவாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com