தில்லி தமிழ்ச் சங்கத்தில் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி

பொங்கல் விழாவை முன்னிட்டு, தில்லி தமிழ்ச் சங்கத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் (தஞ்சாவூா்) வழங்கிய மாபெரும் கிராமிய பல்சுவை

பொங்கல் விழாவை முன்னிட்டு, தில்லி தமிழ்ச் சங்கத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் (தஞ்சாவூா்) வழங்கிய மாபெரும் கிராமிய பல்சுவை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இசை, நாடகம், கரகாட்டம், காவடியாட்டம், ஜிக்காட்டம் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு சமூகப் பாதுகாப்பு தேசிய நிறுவனத்தின் இயக்குநா் ஆா். கிரிராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி, இணைப் பொருளாளா் வி.என்.டி. மணவாளன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் மாலதி தமிழ்ச்செல்வன், ஜெ. சுந்தரேசன், சி. கோவிந்தராஜன் ஆகியோா் சிறப்பு விருந்தினரையும், கலைஞா்களையும் கெளரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com