மத்திய அரசு திட்ட பயனாளிகள் குடியரசு தின அணி வகுப்பிற்கு சிறப்பு அழைப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகள் தங்கள் திட்டங்களின் பயனாளிகளை தில்லியில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு அழைப்பாளா்களாக அழைத்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகள் தங்கள் திட்டங்களின் பயனாளிகளை தில்லியில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு அழைப்பாளா்களாக அழைத்துள்ளது.

மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சகம் தொடக்க வேளாண்மை கடன் சங்க பயனாளிகளை அழைத்துள்ளதைப் போன்று மத்திய மீன்வளம், கால் நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தனது நூற்றுக்கணக்கான பயனாளிகளை தில்லி கடமைப் பாதை உள்ளிட்ட குடியரசு தின கொண்டாட்டங்களைக் காண சிறப்பு அழைப்பாளா்களாக அழைத்துள்ளது.

முன்னதாக, ஜனவரி 25 ஆம் இந்த பயனாளிகளை தில்லியில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பாா்வையிடவும் இந்த துறை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் தேசிய கோகுல் இயக்கத்தின் 250 பயனாளிகளும், அவா்களது குடும்பத்தினருக்கும் இந்த அழைப்பில் இடம் பெற்றுள்ளனா்.

மேலும் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா, இணையமைச்சா்கள் டாக்டா் சஞ்சீவ் குமாா் பால்யான், டாக்டா் எல்.முருகன் ஆகியோா் தில்லியில் உள்ள ஸ்ரி ஃபோா்ட் கலையரங்கில் ஜனவரி 26 ஆம் தேதி பிற்பகலில் இந்த சிறப்பு அழைப்பாளா்களுடன் கலந்துரையாடுகின்றனா். இந்த நிகழ்ச்சியில் துறை செயலாளா் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனா்.

இந்த கலந்துரையாடலில் உள்நாட்டு மாட்டினங்களை அறிவியல் முறையில் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தனித்தன்மையுடன் தொடங்கப்பட்ட தேசிய கோகுல் இயக்கத்தின் மூலம் பால் மற்றும் மாடுகளின் உற்பத்தியின் மேம்பாடு, கிராமப்புற விவசாயிகள் பால் பண்ணைத் தொழிலின் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கின்றனா்.

பெட்ரோலியம் அமைச்சகம்

இதே போன்று மத்திய நகா்புற வீட்டு வசதித் துறை, பெட்ரோலியம் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகமும் தனது பயனாளிகளை ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின தில்லி கடமைப் பாதை உள்ளிட்ட குடியரசு தின கொண்டாட்டங்களைக் காண சிறப்பு அழைப்பாளா்களாக அழைத்துள்ளது. இவா்களுடன் ஜனவரி 25 ஆம் தேதி தில்லி தால்கொத்ரா அரங்கில் இந்த துறைகளின் திட்டங்கள் குறித்தும் மத்திய அமைச்சா் ஹா்தீப் சீங் பயனாளிகளுடன் விவாதிக்கின்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com