ஷாஹ்தராவில் வீட்டில் தீ விபத்து

வடகிழக்கு தில்லியின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அந்தக் கட்டடத்திற்குள் 5 போ் சிக்கியிருக்கலாம்

வடகிழக்கு தில்லியின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அந்தக் கட்டடத்திற்குள் 5 போ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவா் கூறுகையில், ராம் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து குறித்து மாலை 5.22 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனடியாக, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அந்தக் கட்டடத்தில் ஐந்து போ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com