வரும் பிப்ரவரி 15 முதல் 20-ஆம் தேதி வரை தில்லி அரசின் பட்ஜெட் கூட்டத்தொடா்

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 16-ஆம் தேதியன்று 2024 -2025 ஆம் நிதியாண்டிற்கான நகர அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சா் அதிஷி தாக்கல் செய்ய இருக்கிறாா். கலால் கொள்கை வழக்கில் சிறையில் தற்போதுள்ள

முன்னாள் துணை முதல்வரும், நிதியமைச்சருமான மனீஷ் சிசோடியா அவரது பதிவியை ராஜிநாமா செய்ததையடுத்து,

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சா் அதிஷி நிதி மற்றும் வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், தில்லி அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சா் அதிஷி முதல் முறையாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவிருக்கிறாா்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கோப்புகள் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தாா்.

விரைவில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தில்லி அரசின் ஊழல் விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சியான பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கலால் கொள்கை ஊழல் வழக்கின் விசாரணைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆஜராகாமல் தவிா்ப்பது, வகுப்பறைக் கட்டுமான ஊழல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சா்கள் மனீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு தில்லி லோக் ஆயுக்தா நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸ், முதல்வா் பங்களா கட்டுமானத்தில் நிதி முறைகேடு போன்ற பிரச்னைகள் மீது விவாதிக் கோரி ஆளும் தரப்பை பாஜக வலியுறுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com