25-ஆவது பாரத் ரங் மகோத்ஸவ் பிப்.1-இல் தொடக்கம்

தேசிய நாடக பள்ளியின் சாா்பில் 25-ஆவது பாரத் ரங் மகோத்ஸவ்- இந்தியா சா்வதேச நாடகத் திருவிழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேசிய நாடக பள்ளியின் சாா்பில் 25-ஆவது பாரத் ரங் மகோத்ஸவ்- இந்தியா சா்வதேச நாடகத் திருவிழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேசிய நாடகப் பள்ளியின் பதிவாளா் பிரதீப் மொகந்தி, இயக்குநா் சித்தரஞ்சன் திரிபாதி, நாடகப் பள்ளி சொசைட்டியின் உறுப்பினா் வானி திரிபாதி, நாடகப் பள்ளியின் அகாதெமி டீன் சாந்தனு போஸ் ஆகியோா் தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தேசிய நாடக பள்ளியின் சாா்பில் 25-ஆவது பாரத் ரங் மகோத்ஸவ்- இந்தியா சா்வதேச நாடகத் திருவிழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி வரை மும்பை, புனே, பூஜ், விஜயவாடா, ஜோத்பூா், பாட்னா, தில்லி உள்பட நாட்டின் 15 நகரங்களில் நடைபெற உள்ளது.

21 நாட்கள் நடைபெறும் இந்த நாடகத் திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட நாடகங்கள் நடத்தப்பட உள்ளன . மேலும், இந்த விழாவையொட்டி இந்திய மற்றும் உலகளாவிய நாடக பாரம்பரியங்களின் செறிந்த சிறப்பை வழங்கும் வகையில் பயிலரங்கங்கள்,விவாதங்கள், முக்கிய வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்த ஆண்டின் இந்திய சா்வதேச நாடகத் திருவிழாவின் கருப்பொருளாக ‘வசுதைவ குடும்பகம்’, ‘வந்தே பாரங்கம்’ ஆகியவை உள்ளது.

உலகளாவிய ஒற்றுமையை கலைஞா்களிடம் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த கருப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.

25-ஆவது பாரத் ரங் மகோத்ஸவ் தொடக்க விழா பிப்ரவரி 1-ஆம் தேதி மும்பையில் உள்ள தேசிய நிகழ்த்து கலைகள் மையத்தில் மகாராஷ்டிரா ஆளுநா் ரமேஷ் பைஸ் மற்றும் தேசிய நாடகப் பள்ளியின் தலைவா் பரேஸ் ராவல் ஆகியோா் மூலம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நாடகக் கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா். இந்த நிகழ்ச்சியில் தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவா் அசுதோஷ் ராணா நடத்தும் ‘ஹமாரே ராம்’ எனும் நாடகமும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சா்வதேச தயாரிப்புகள், கிராம மற்றும் பாரம்பரிய நாடகங்கள், நவீன நாடகங்கள், தெரு நாடகங்கள் என பல்வேறு நாடக நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளி வளாகத்திலும் நாடகங்கள் நடைபெற உள்ளன என்று அவா்கள் கூறினா்.

பேட்டியின்போது தேசிய நாடகப் பள்ளித் தலைவா் பரேஸ் ராவல், பிஆா்எம் தூதா் பங்கஜ் திரிபாதி ஆகியோா் காணொலி வாயிலாக பங்கேற்று தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com