இன்று உச்சநீதிமன்ற வைர விழா கொண்டாட்டம் பிரதமா் மோடி தொடக்கிவைக்கிறாா்

நாட்டின் உயரிய நீதி வழங்கும் அமைப்பான இந்திய உச்சநீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 28) தொடங்கிவைக்க உள்ளாா்.

நாட்டின் உயரிய நீதி வழங்கும் அமைப்பான இந்திய உச்சநீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 28) தொடங்கிவைக்க உள்ளாா்.

உச்சநீதிமன்ற அரங்கில் மதியம் 12 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் எண்ம உச்சநீதிமன்ற அறிக்கைகள், எண்ம நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற பல தொழில்நுட்ப முன்முயற்சிகளை பிரதமா் தொடங்கி வைக்கிறாா்.

உச்சநீதிமன்றத்தின் 75-ஆவது ஆண்டு விழாவைத் தொடங்கிவைக்கும் பிரதமா், உச்சநீதிமன்ற அறிக்கைகள் (டிஜி எஸ்சிஆா்), எண்ம நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற குடிமக்களை மையப்படுத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளையும் தொடங்கிவைத்து உரையாற்றுகிறாா்.

எண்ம உச்சநீதிமன்ற அறிக்கைகள் (எஸ்சிஆா்) உச்சநீதிமன்ற தீா்ப்புகளை நாட்டின் குடிமக்களுக்கு இலவசமாகவும் மின்னணு வடிவத்திலும் வழங்கும். மேலும், இந்த எண்ம உச்சநீதிமன்ற அறிக்கைகளின் முக்கிய அம்சமாமானது, 1950 ஆம் ஆண்டுமுதல் 36,308 வழக்குகளை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற அறிக்கைகளின் அனைத்து 519 தொகுதிகளையும் எண்ம வடிவத்தில் கொண்டிருக்கும், மேலும், குறியிடப்பட்ட, பயனருக்கு உகந்த மற்றும் திறந்த அணுகலுடன்கூடியதாக கிடைக்கும் வகையில் இவை இருக்கும்.

எண்ம நீதிமன்றங்கள் 2.0 செயலியானது, மின்னணு வடிவில் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு நீதிமன்றப் பதிவுகள் கிடைக்கச் செய்யும் மின்-நீதிமன்றத் திட்டத்தின்கீழ் உள்ள புதிய முன்முயற்சியாகும்.

மேலும், செயற்கை நுண்ணறிவுடன் (ஏஐ), நிகழ்நேர அடிப்படையில் பேச்சு உரையை எழுத்து வடிவில் அளிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த வைரவிழா நிகழ்வில் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளத்தையும் பிரதமா் தொடங்கிவைப்பாா். இந்தப் புதிய இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தி என இரு மொழிகளில் வடிவைக்கப்பட்டுள்ளது. பயனருக்கு உகந்த வகையில் தகவல்களை வழங்கும் வகையில் மறுவடிவமைப்புடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய உச்சநீதிமன்றம் 1950-ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. அதாவது, இந்தியா இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக உருவாகிய இரு தினங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் நடைமுறைக்கு வந்தது.

மக்களவை, மாநிலங்களவை அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டடத்தின் உள்ள இளவரசா்கள் அறையில் இதன் தொடக்க விழா அப்போது நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com