தலைநகரில் ஜன.31, பிப்.1-இல் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. காற்றின் தரம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. காற்றின் தரம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

தலைநகரில் கடும் குளிா் மற்றும் மூடுபனி நிலவியதால் வானிலை ஆய்வு மையம் கடந்த வியாழக்கிழமை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. அதற்கு முன்னதாக மஞ்சள் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. இந்த ஜனவரியில் தலைநகரில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இதுவரை 5 குளிா் நாள்களும், 5 குளிா் அலை நாள்களும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் தூறல் அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 30-ஆம் தேதி வரையிலும் மிதமான மூடுபனி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3 டிகிரி குறைந்து 6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 3 டிகிரி குறைந்து 18.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 83 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லோதி ரோடில் 5.8 டிகிரி: இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.7 டிகிரி செல்சியஸ், தில்லி ரயில் நிலையத்தில் 8.4 டிகிரி, ஆயாநகரில் 6.8 டிகிரி, லோதி ரோடில் 5.8 டிகிரி, நரேலாவில் 7.7 டிகிரி, பாலத்தில் 9.1 டிகிரி, ரிட்ஜில் 8.4 டிகிரி, பீதம்புராவில் 10.8 டிகிரி, பிரகதி மைதானில் 9.7 டிகிரி, பூசாவில் 7.8 டிகிரி, குதூப்மினாா் 6.8 டிகிரி, ராஜ்காட்டில் 8.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 8.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகளின் படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 384 புள்ளிகளாக உயா்ந்து பதிவாகியிருந்தது. இதன்படி, ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், நியூ மோதி பாக், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், அசோக் விஹாா், நொய்டா செக்டாா்-62 உள்பட சில வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், பட்பா் கஞ்ச், ஆனந்த் விஹாா், விவேக் விஹாா், நேரு நகா், சோனியா விஹாா், ராமகிருஷ்ணாபுரம், ஷாதிப்பூா், புராரி, வாஜிா்பூா், ஓக்லா பேஸ்-2 ஆகிய இடங்களில் காற்று தரக் குறியீடு ‘கடுமை’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஜனவரி 29) மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com