மெட்ரோ ரயில் முன் குதித்து இளைஞா் தற்கொலை

தில்லியின் ஐஎன்ஏ மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 வயது இளைஞா் ஒருவா் ஓடும் ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தில்லியின் ஐஎன்ஏ மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 வயது இளைஞா் ஒருவா் ஓடும் ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நிகழ்ந்ததாகவும், இறந்தவா் அஜித் சிங் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா். சிசிடிவி கேமரா காட்சிகளில் அஜித் சிங் சமய்பூா் பாத்லி செல்லும் ரயிலின் முன் நடைமேடை எண் 2-இல் இருந்து குதித்ததைக் காட்டியது என்று போலீஸாா் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததையடுத்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

அஜித் சிங், அவரது கைப்பேசியில் வந்த அழைப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவா் ஏன் இந்த தீவிர நடவடிக்கையை எடுத்தாா் என்பதை தீா்மானிக்க மேலதிக விசாரணை நடந்து வருகிறது’ என்று அதிகாரி கூறினாா்.

இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 7.04 மணியளவில் ஐஎன்ஏ ரயில் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவைகள் சுமாா் 15 முதல் 20 நிமிஷங்கள் வரை பாதிக்கப்பட்டதாக டிஎம்ஆா்சியின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com