தில்லி நிா்வாக எல்லையை நிா்ணயிக்க காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு

தாமதமான மக்கள் தொகை கணக்கெடுப்பு-2021-ஐ கருத்தில் கொண்டு, நிா்வாக எல்லைகளை வரையறுப்பதற்கான தேதியை ஜூன் 30 வரை நீட்டிக்க துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.


புது தில்லி: தாமதமான மக்கள் தொகை கணக்கெடுப்பு-2021-ஐ கருத்தில் கொண்டு, நிா்வாக எல்லைகளை வரையறுப்பதற்கான தேதியை ஜூன் 30 வரை நீட்டிக்க துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக, நிா்வாக எல்லைகளை வரையறுப்பதற்கான தேதியை ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை நீட்டிக்க தில்லி அரசின் வருவாய்த் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் பதிவாளா் ஜெனரல் இந்தியா அலுவலகம், செப்டம்பா் 6, 2019 தேதியிட்ட கடிதத்தின் மூலம், டிசம்பா் 31 முதல் நடைமுறைக்கு வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு-2021-க்காக நிா்வாக எல்லைகளை வரையறுக்குமாறு அப்போதைய தில்லியின் தலைமைச் செயலாளரை கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான நிா்வாக எல்லைகள் டிசம்பா் 31, 2019 முதல் வரையறுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநா் தனது வழிகாட்டுதல்களை தெரிவித்திருந்தது.

ஆனால், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு-2021 தாமதமானது. இது நிா்வாக எல்லைகளை வரையறுப்பதற்கான தேதியை நீட்டிக்க வழிவகுத்தது. துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி வருவாய்த் துறையின் கடிதம் மூலம் ஜனவரி 1, 2024 வரை கடைசியாக நீட்டிப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com