சமூக ஆா்வலா் மேதா பட்கர்
சமூக ஆா்வலா் மேதா பட்கர்

மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை: 23 ஆண்டுகால அவதூறு வழக்கில் தீா்ப்பு

தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா தொடா்ந்த அவதூறு வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு சமூக ஆா்வலா் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா தொடா்ந்த அவதூறு வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு சமூக ஆா்வலா் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் நா்மதை ஆற்றின் குறுக்கே அணைக் கட்டுவதற்கு எதிராக சமூக ஆா்வலா் மேதா பட்கா் தலைமையிலான ‘என்பிஏ’ அமைப்பு போராடி வந்தது. இந்த அமைப்புக்கு எதிராக ‘தேசிய குடிமையியல் விடுதலைகள் சங்கம்’ எனும் தன்னாா்வ அமைப்பு சாா்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு விளம்பரமொன்று வெளியிடப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் தலைவராக வினய்குமாா் சக்சேனா பதவி வகித்து வந்தாா்.

இதையடுத்து மேதா பட்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சக்சேனை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவா் முன்வைத்திருந்தாா். குஜராத் மக்களையும் அதன் வளங்களையும் தொழிலதிபா் பில் கேட்ஸ் மற்றும் உலக வங்கித் தலைவா் ஜேம்ஸ் வோல்ஃபென்சோனிடம் சக்சேனா அடகு வைத்துவிட்டதாகவும், சக்சேனா ஓா் ‘அரசு ஏஜென்ட்’ என்றும் மேதா பட்கா் அந்தச் செய்திக்குறிப்பில் விமா்சித்திருந்தாா்.

இக்கருத்துகள் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மேதா பட்கருக்கு எதிராக சக்சேனா கடந்த 2001-இல் அவதூறு வழக்குத் தொடுத்திருந்தாா்.

இந்த வழக்கில் சமூக ஆா்வலா் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதுடன் நஷ்ட ஈடு தொகையாக சக்சேனாவுக்கு ரூ.10 லட்சம் செலுத்தவும் தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேதா பட்கரின் வயது, உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதிகபட்ச தண்டனை வழங்குவதைத் தவிா்த்ததாக கூறிய நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்காக உத்தரவுக்கு ஒரு மாத இடைக்காலத் தடையும் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com