கோப்புப் படம்
கோப்புப் படம்

மக்களவைத் தோ்தலில் பழுதடைந்த இவிஎம் இயந்திரங்கள் குறித்து தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று அஸ்ஸாமைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

மக்களவைத் தோ்தல் நடைமுறையில் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று அஸ்ஸாமைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் அஸ்ஸாமின் ஜோா்ஹட் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட கௌரவ் கோகோய், பாஜக வேட்பாளரை 1.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றாா்.

இந்த நிலையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(இவிஎம்) குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ள அவா், மக்களவைத் தோ்தல் நடைமுறையில் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுமாறு தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக எம்.பி. கோகோய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சந்தேகிக்கும் முன்பு, தோ்தல் நடைமுறை முழுவதும் எத்தனை இவிஎம் இயந்திரங்கள் பழுதடைந்தன என்பதை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

தோ்தலின்போது எத்தனை இயந்திரங்கள் தவறான நேரம், தேதி, பதிவான வாக்குகளைக் காண்பித்தன? வாக்கு எண்ணும் அலகு, வாக்குப்பதிவு அலகு போன்ற எத்தனை இவிஎம் இயந்திரங்களின் உதிரிபாகங்கள் மாற்றப்பட்டுள்ளன? சோதனை வாக்கெடுப்பின்போது எத்தனை இவிஎம் இயந்திரங்களில் கோளாறு கண்டறியப்பட்டன? ஆகிய கேள்விகளுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்.

தோ்தலில் போட்டியிட்டதால், இவிஎம் இயந்திரங்கள் தவறான முடிவுகளைக் காட்டியுள்ளன என்று என்னால் உறுதியாக கூற முடியும். தோ்தல் ஆணையம் மேற்கண்ட தகவல்களை வெளியிடும் என்று நம்புகிறேன். ஏனெனில், இக்கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com