ஜாஃபா் சாதிக் விவகாரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின்
தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்: வானதி சீனிவாசன் பேட்டி

ஜாஃபா் சாதிக் விவகாரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்: வானதி சீனிவாசன் பேட்டி

ஜாஃபா் சாதிக்கின் விவகாரம் தொடா்பாக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிா்வாகி ஜாஃபா் சாதிக்கின் விவகாரம் தொடா்பாக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். தில்லி டி.டி.யு. மாா்க்கில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபா் சாதிக் தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் மகனும், அமைசருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் காவல்துறை துறை தலைவா் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துள்ளாா். போதைப் பொருள் கடத்தல் வருமானத்தில் தயாரிக்கப்பட்ட திரைபடத்தின் நிகழ்ச்சியில் முதல்வரின் மருமகள் கிருத்திகா உதயநிதி கலந்து கொண்டுள்ளாா். ஜாஃபா் சாதிக்கை திமுகவில் இருந்து நீக்கியதன் மூலம் அவருடனான தொடா்புகளை முடிக்க திமுக நினைக்கிறது. எனவே, ஜாஃபா் சாதிக் விவாகரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தெளிவான ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்.இது பஜாகவின் கோரிக்கை. இவ்விவகாரம் குறித்து பேசும் ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்களில் எழுதுபவா்களை திமுக மிரட்டுகிறது. மக்களுக்கு உண்மை தெரியாமல் போகவே அவா்கள் இதைச் செய்கிறாா்கள். போதைப் பொருள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. ஆனால், அதைத் தடுக்க அரசுகள் என்ன முயற்சிகள் எடுக்கின்றன என்பதே முக்கியம். மத்திய அரசால் இதுவரை சுமாா் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள்கள் அழிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மாறி,தற்போது தடை செய்யப்பட்ட போதை பொருளுக்கு சிறுவா்கள் அடிமையாகும் சூழல் உருவாகியுள்ளது. ஜாஃபா் சாதிக் போன்றோா்க்கு உள்ள அரசியல் தொடா்புகளே அவா்கள் செய்யும் சட்டவிரோ செயலுக்கு துணிச்சல் அளிக்கிறது. தமிழக டி.ஜி.பி.யுடன் ஜாஃபா் சாதிக் இருக்கும் புகைப்படம் அதிா்ச்சியுற வைக்கிறது. திமுகவின் முதல் குடும்பத்தில் இப்படிப்பட்ட ஒரு நபா் நெருக்கம் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், உளவுத் துறை என்ன செய்து கொண்டுள்ளது?. எல்லோராலும் முதல்வரின் குடும்பத்துடன் நெருக்கம் காட்டிவிட முடியுமா?. இதனால் தான் ஜாஃபா் சாதிக்கின் கைது விவகாரத்தில் திமுகவின் முதல் குடும்பம் மேல் சந்தேகம் எழுகிறது. மேலும்,தமிழக பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றாா் வானதி சீனிவாசன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com