புதிய வழக்கில் கேஜரிவாலுக்கு சம்மன்

புதிய வழக்கில் கேஜரிவாலுக்கு சம்மன்

திங்கள்கிழமை (மாா்ச் 18) விசாரணைக்கு ஆஜராக கூறி, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லி ஜல்போா்டு (குடிநீா் வழங்கல் வாரியம்) ஒப்பந்த விநியோகத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், திங்கள்கிழமை (மாா்ச் 18) விசாரணைக்கு ஆஜராக கூறி, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் என்ற நிறுவனம் தில்லி ஜல்போா்டில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து, ரூ.38 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்ாகவும், இந்த முறைகேடு வாயிலாக பெறப்பட்ட பணம் ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் நிதிக்குச் சென்ாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தி ஜல்போா்டு தலைமை என்ஜினீயா் ஜெகதீஷ் குமாா் அரோரா, ஒப்பந்ததாரா் அனில் குமாா் ஆகியோரை கடந்த ஜனவரியில் கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் மாா்ச் 18-இல் விசாரணைக்கு ஆஜராக கூறி, முதல்வா் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், கேஜரிவாலுக்கு 9-ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ஜல்போா்டு ஒப்பந்த முறைகேடு புகாரிலும் அவா் விசாரணையை எதிா்கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com