ஆசிய வளா்ச்சி வங்கி துணைத் தலைவருடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு
-

ஆசிய வளா்ச்சி வங்கி துணைத் தலைவருடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை சந்தித்து, வளா்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆசிய வளா்ச்சி வங்கியின் புதிய துணைத் தலைவா் (சந்தைத் தீா்வுகள்) பாா்கவ் தாஸ்குப்தாவுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை சந்தித்து, வளா்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வளா்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் இந்தியாவுடன் எந்த வகையில் ஆசிய வளா்ச்சி வங்கி கூட்டு சோ்ந்து பணியாற்ற முடியும் என்பது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை மேற்கொண்டனா். மேலும், இந்தியாவின் வளா்ச்சியில் பிற அரசு மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் ஆசிய வளா்ச்சி வங்கியின் கூட்டிணைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com