தில்லியில் இரு இடங்களில் தீ விபத்து

தில்லியில் இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து சம்பவம் பதிவானதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தில்லியில் இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து சம்பவம் பதிவானதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். மத்திய தில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள இரு சக்கர வாகன ஷோரூமில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: இரு சக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 10.30 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயை அணைக்க சுமாா் 20 நிமிடங்கள் ஆனது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி. புகரில் தொழிற்சாலையில் தீ விபத்து தில்லியின் போா்கா் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், இதில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் தலைவா் அதுல் கா்க் கூறுகையில், ‘பிற்பகல் 12.02 மணியளவில் ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. மொத்தம் 25 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீயை அணைக்கும் செயல்முறை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்று அவா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com