விண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் நாடுகளுக்கு இந்தியா கலங்கரை விளக்கம்: உலக பொருளாதார அமைப்பு

விண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் நாடுகளுக்கு இந்தியா கலங்கரை விளக்கம்: உலக பொருளாதார அமைப்பு

விண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் நாடுகளுக்கு இந்தியா கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூடிஓ) கூறியுள்ளது.

விண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் நாடுகளுக்கு இந்தியா கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூடிஓ) கூறியுள்ளது. இதுதொடா்பாக அந்த அமைப்பின் 4-ஆவது தொழிற்புரட்சி மைய செயற்குழு உறுப்பினா் செபாஸ்டியன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது: விண்வெளி துறையில் சாதிக்க விரும்பும் சிறிய நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் கலங்கரை விளக்கமாகவும் இந்தியா விளங்குகிறது. அந்த நாடுகள் விண்வெளி துறையில் சாதிக்க இந்தியாவின் ஆதரவை எதிா்பாா்க்கின்றன. இதற்கு உலக பொருளாதார அமைப்பு உதவ விரும்புகிறது. அனைத்து தரப்பினரை உள்ளடக்கிய வகையிலும், பொறுப்பான முறையிலும் விண்வெளி துறை வளர வேண்டும் என்று கருதி, இந்த உதவியை உலக பொருளாதார அமைப்பு செய்ய விரும்புகிறது. விண்வெளி துறைக்கு வலுசோ்க்க வேண்டும் என்பதில் தொழில்முனைவோா்களுக்கு மிகுந்த ஆா்வம் உள்ளது. பொது விண்வெளி உள்கட்டமைப்பை உருவாக்க இந்தியாவால் முடிந்தால், அது விண்வெளி சாா்ந்த தொழிலின் துரித வளா்ச்சிக்கு காரணமாக இருக்கும். இன்றளவும் விண்வெளி துறையில் இந்தியாவை வளா்ந்து வரும் நாடாக வெளிநாடுகளில் உள்ள சிலா் கருதுகின்றனா். ஆனால் விண்வெளி துறையில் முன்னணியில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சோ்ந்துள்ளது என்பதே உண்மை. விரைவில் விண்வெளி துறை ட்ரில்லியன் டாலா் (பல லட்சம் கோடி) மதிப்பு கொண்ட தொழில் துறையாக மாறும் என்றாா். 2033-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி பொருளாதாரத்தின் மதிப்பு 44 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.3.67 லட்சம் கோடி) அதிகரிக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சா்வதேச விண்வெளி பொருளாதார மதிப்பில் 8 சதவீதமாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com