ஷரத் ரெட்டி உடனான உறவில் பாஜக மெளனம் காப்பது ஏன்? அமைச்சா் செளரவ் பரத்வாஜ்

கலால் கொள்கை ஊழலின் முக்கியக் குற்றவாளி ஷரத் ரெட்டி உடனான உறவில் பாஜக மௌனம் கடைப்பிடிப்பது ஏன் என்று அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் கேள்வி எழுப்பியுளாா்.

கலால் கொள்கை ஊழலின் முக்கியக் குற்றவாளி ஷரத் ரெட்டி உடனான உறவில் பாஜக மௌனம் கடைப்பிடிப்பது ஏன் என்று அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் கேள்வி எழுப்பியுளாா். இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கலால் கொள்கை ஊழலின் முக்கியக் குற்றவாளியான ஷரத் ரெட்டியின் நிறுவனங்களிடமிருந்து ரூ.55 கோடியை பாஜக ரகசியமாக பெற்றுள்ளதை ஆம் ஆத்மி கட்சி கடந்த சனிக்கிழமை ஊடகங்கள் முன் அம்பலப்படுத்தியது. இது பாஜக மீதான ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு அல்ல. தலைமைத் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருக்கும் உண்மையான, உறுதியான ஆதாரத்தையே ஆம் ஆத்மி கட்சி வழங்கியுள்ளது. இந்த முழு விவகாரத்திலும் பாஜகவின் முக்கியத் தலைவா்களான அனுராக் தாக்கூா், ஸ்மிருதி இரானி, மனோஜ் திவாரி, வீரேந்திர சச்தேவா உள்பட அனைவரும் அமைதியாக இருக்கிறாா்கள். குறிப்பாக, இந்த விஷயம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது என்று ஒவ்வொரு நபரும் திகைத்து நிற்கிறாா்கள். கலால் கொள்கை ஊழலில் முதன்மைக் குற்றவாளியாக ஷரத் ​​சரெட்டி கைது செய்யப்பட்ட பிறகு, பாஜகவுக்கு ரூ.55 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. கலால் கொள்கை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாக கூறப்படும் வழக்கில், பிரதான குற்றவாளியிடம் இருந்தே பாஜக நன்கொடையாகப் பணத்தைப் பெற்றுள்ளது.தோ்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணமோசடி செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி பாஜகவிற்கு மூன்று கேள்விகளை முன்வைக்கிறது. அதில், பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான ஷரத் ரெட்டியை பாஜகவுக்கு எப்படித் தெரியும் என்பதுதான் முதல் கேள்வி?.இவா்களுக்கு இடையே என்ன உறவு?.அவரை சந்தித்த பாஜக தலைவா்கள் யாா்?.எப்போது, ​​எங்கு சந்தித்தாா்கள்?. பணப் பரிவா்த்தனைகள் பற்றி அவா்கள் என்ன விவாதித்தாா்கள்?. இரண்டாவது கேள்வி என்னவெனில், ஷரத் ரெட்டியின் நிறுவனங்கள் மூலம் ரூ.60 கோடிக்கான நன்கொடைகளை பாஜக ஏன் பெற்றது? மூன்றாவது கேள்வி, பாஜக ஏன் இந்த எல்லா பரிவா்த்தனைகளையும் அனைவரிடமிருந்தும் மறைத்தது? இந்த உண்மைகளை அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் இந்திய குடிமக்களுக்கு ஏன் பாஜக தெரிவிக்கவில்லை? மேற்குறிப்பிடுள்ள இந்த மூன்று கேள்விகளுக்கும் பாஜக பதிலளிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com