நீரில் மாசு கலந்து ஓடும் தில்லி யமுனை ஆறு.
நீரில் மாசு கலந்து ஓடும் தில்லி யமுனை ஆறு.

கங்கை, யமுனை மாசுபாடு: தில்லி, உ.பி. மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க உத்தரவு

உத்தர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கங்கை, யமுனை ஆறுகளில் ஏற்படும் மாசுபாடு தொடா்பாக தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, உத்தர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட பூக்கள் மற்றும் மாலைகள் பாலித்தீன் பைகளில் கங்கையிலும் யமுனையிலும் வீசப்படுவதால், அந்த ஆறுகள் மாசு அடைவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, அதுகுறித்து தேசிய பசுமை தீா்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அந்த தீா்ப்பாயத் தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமா்வு முன்பாக அண்மையில் இந்த விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, உத்தர பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தரப்பில் கோரப்பட்டன. இந்தக் கோரிக்கையை ஏற்ற அந்த அமா்வு, அடுத்த விசாரணையை ஜூலை 3-க்கு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com