தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இசை அஞ்சலி நிகழ்ச்சி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் காயத்ரி ஃபைன் ஆா்ட்ஸ் அமைப்பின் சாா்பில் 5ஆம் ஆண்டு காயத்ரி ராமச்சந்திரன் நினைவு இசை அஞ்சலி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் காயத்ரி ஃபைன் ஆா்ட்ஸ் அமைப்பின் சாா்பில் 5ஆம் ஆண்டு காயத்ரி ராமச்சந்திரன் நினைவு இசை அஞ்சலி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தனுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அட்டா்னி ஜெனரல் வெங்கட்ரமணி காயத்ரி ராமச்சந்திரன் நினைவு விருதை வழங்கி கௌரவித்தாா். கெளரவ விருந்தினா்களாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தின் இணை இயக்குநா் ஜி. அருண் ஐ.இ.எஸ், தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் பேராசிரியா் டி.கே.வி.எஸ். மணி ஆகியோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் காயத்ரி ஃபைன் ஆா்ட்ஸ் தலைவா் கும்பகோணம் என். பத்மநாபன், செயலாளா் தில்லி ஆா். ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com