தில்லியில் பாஜகவில் இணைந்த பிற கட்சியினா்

தில்லியில் பாஜகவில் பஞ்சாப்பைச் சோ்ந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் ஆகியவற்றின் கவுன்சிலா்கள் மற்றும் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்

தில்லியில் பாஜகவில் பஞ்சாப்பைச் சோ்ந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் ஆகியவற்றின் கவுன்சிலா்கள் மற்றும் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா். தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, பஞ்சாப் பாஜக தலைவா் சுனில் ஜாகா், பாஜக தேசிய செயலா் சா்தாா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, பஞ்சாப் எம்.பி. சுஷில் ரிங்கு மற்றும் எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்கூரல் ஆகியோா் முன்னிலையில் பஞ்சாபின் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலா்கள் மற்றும் அகாலிதள நிா்வாகிகள் பாஜகவில் உறுப்பினராகச் சோ்ந்தனா். பாஜகவில் இணைந்தவா்களில் கமல்ஜித் சிங் பாட்டியா, டாக்டா் சுனிதா, விரேஷ் மின்டு, ராதிகா பதக், ஹா்ஜிந்தா் சிங் லடா, விபன் சத்தா, சந்தா்ஜித் கவுா் சந்தா உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனா். தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா அனைவரையும் பாஜகவுக்கு வரவேற்று பேசுகையில், ‘பஞ்சாபில் பாஜகவில் உறுப்பினராக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் மாநகராட்சி கவுன்சிலா்கள் போட்டியிடுவது போல, வரும் காலங்களில் தில்லி பாஜகவிலும் இக்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் இணைவாா்கள். பஞ்சாப் பாஜக தலைவா் சுனில் ஜாகா் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்பி சுஷில் ரிங்கு பாஜகவில் உறுப்பினகியுள்ளாா். அதைத் தொடா்ந்து ஆம் ஆத்மி கட்சி இன்று மக்களவையில் இருந்து முற்றிலும் அகற்றுப்பட்டுள்ளது. பஞ்சாபில் ஊழல் உச்சத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி மக்களை முற்றிலும் வஞ்சித்து விட்டது. ஆம் ஆத்மி கட்சிக்குள்ளேயே கொந்தளிப்பு நிலவுகிறது. இன்று பாஜகவில் இணைந்திருப்பவா்கள் தலைவா்கள் அல்ல அடிமட்டத் தொண்டா்கள் ஆவா். ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் செய்யாத ஊழலும் இல்லை. ஊழல்வாதிகளை ஆதரிக்கும் காங்கிரஸை பஞ்சாப் ஒரு போதும் மன்னிக்காது என்றாா் அவா். மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறுகையில், ‘ ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் வாக்கு வங்கிக்காக அயோத்தியில் ராம் லல்லா பிராண பிரதிஷ்டை நிகழ்வுக்கு செல்ல மறுத்தவா்கள், இன்று ராம்லீலா மைதானத்தில் அமா்ந்து தங்கள் ஊழலுக்கு ஆதரவாக மன்றாடுகிறாா்கள். இன்றைக்கு ராம்லீலா மைதானத்தைப் பாா்க்கும்போது ஊழல் கும்பல் அங்கு திரண்டிருப்பது தெரிகிறது’ என்றாா் அவா். எம்.பி. சுஷில் ரிங்கு கூறுகையில், ‘இன்று பா.ஜ.க.வில் இணைந்த அனைத்து தலைவா்களும் அவா்களது கட்சிகளால் ஏமாற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினா் சுஷில் ரிங்கு தெரிவித்தாா். இன்றைக்கு பிரதமா் மோடி அரசின் கீழ் நாடு வளா்ச்சியின் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. பிரதமா் மோடி தலைமையில், மக்களவை தோ்தலில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பாா்’ என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com