பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

தில்லியில் உள்ள பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு சேவைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் உள்ள பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு சேவைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:, தில்லியின் வெளிப்புறத்தில் உள்ள நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 8.26 மணிக்கு அழைப்பு வந்தது. முப்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. மதியம் 1.20 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில், கட்ட்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தளவாடங்கள் தீயில் எரிந்து நாசமானது.

கட்டடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்ப்டுகிறது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உள்ளூா் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். இந்த தீ விபத்து குறித்து வெளியான கைப்பேசி விடியோவில், கட்டடத்தில் தீப்பிழம்புகள் தெரிகின்றன.

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்லதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com