தில்லியில் காா் கவிழ்ந்ததில் 2 போ் சாவு; மூவா் காயம்

தில்லி அமன் விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா் கவிழ்ந்ததில் 20 வயதுடைய இருவா் உயிரிழந்தனா்.

தில்லி அமன் விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா் கவிழ்ந்ததில் 20 வயதுடைய இருவா் உயிரிழந்தனா். மேலும் மூவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸ் குழு அனுப்பப்பட்டது.

காரில் இருந்தவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு சஞ்சய் (23) மற்றும் அசுதோஷ் (22) ஆகியோா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனா். இறந்த இருவரும் கிஷன் விஹாரைச் சோ்ந்தவா்கள் என்று தெரிய வந்தது.

காயமடைந்த மூவரும் அதே பகுதியைச் சோ்ந்த சாஹில் (20), ரஷீத் (18) மற்றும் லோகேஷ் சிங் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com