தலைநகரில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு

தலைநகரில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. இந்நிலையில், மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், இரவு வரையிலும் மழை ஏதும் பெய்யவில்லை. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 25.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 0.3 டிகிரி உயா்ந்து 39.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 53 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 37 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 376 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரம் இந்த வாரத் தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், வியாழக்கிழமைக்குப் பிறகு சற்று முன்னேற்றம் அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை நகரத்தின் பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது. இதன்படி, ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், நொய்டா செக்டாா் 1, நொய்டா செக்டாா் 62, தில்ஷாத் காா்டன், விவேக் விஹாா், நியூ மோதி பாக், சோனியா விஹாா், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், பூசா, புராரி ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், அசோக் விஹாா், ஷாதிப்பூா், வாஜிா்பூா், ஓக்லா பேஸ் 2 ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (மே 13) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும்என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com