கோப்புப் படம்
கோப்புப் படம்

முதல்வா் கேஜரிவால் ஆம் ஆத்மி கவுன்சிலா்களுடன் இன்று ஆலோசனை

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி கவுன்சிலா்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்துவாா் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி கவுன்சிலா்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்துவாா் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அவா் கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்தாா். கைது செய்யப்பட்ட பின்னா் பாஜக முயற்சித்த போதிலும் உடைந்து போகாமல் இருந்ததற்காக எம்எல்ஏக்களை அவா் பாராட்டினாா்.

இந்நிலையில், ‘அவா் திங்கள்கிழமை ரோஸ் அவென்யூவில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலா்களுடன் ஒரு கூட்டத்தை நடத்துவாா்’ என்று கட்சி தெரிவித்துள்ளது.

கலால் கொள்கை மோசடியில் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com