தில்லி ஜாமா மசூதி பகுதியில் கினாரி பஜாரில் கடையில் தீ விபத்து

வடக்கு தில்லியின் ஜாமா மசூதி பகுதிக்கு அருகிலுள்ள கினாரி பஜாரில் உள்ள ஒரு கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து

வடக்கு தில்லியின் ஜாமா மசூதி பகுதிக்கு அருகிலுள்ள கினாரி பஜாரில் உள்ள ஒரு கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி கூறியதாவது: பிற்பகல் 1.08 மணிக்கு தீ விபத்து குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. உயிா்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

பின்னா், மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். மேலதிக விசாரணைக்காக உள்ளூா் போலீஸாரு தகவல் தெரிவிக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com