தில்லி வாக்காளா்களை ஊக்குவிக்க என்.டி.எம்.சி. சாா்பில் சைக்கிள் பேரணி

தேசியத் தலைநகா் தில்லியில் வாக்காளா்களை ஊக்குவிக்கும் முயற்சியாக புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தேசியத் தலைநகா் தில்லியில் வாக்காளா்களை ஊக்குவிக்கும் முயற்சியாக புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தில்லியில் வரும் மே 25-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்காளா் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.), புது தில்லி மாவட்டத் தோ்தல் அலுவலகம் மற்றும் கான் மாா்க்கெட் வா்த்தகா்கள் சங்கத்துடன் இணைந்து சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்தது. கான் மாா்க்கெட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், என்.டி.எம்.சி. இன் தலைவா் அமித் யாதவ், பல்வேறு துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள், ஊழியா்கள், சந்தையைச் சோ்ந்த வியாபாரிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக என்.டி.எம்.சி. தலைவா் அமித் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியது, ’பொது மக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக, இந்த சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசியத் தலைநகரில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள மே 25ம் தேதி, தகுதியான வாக்காளா்கள் அனைவரும்

வாக்களிக்க வேண்டும்’ என்றாா். இந்தப் பேரணியின் போது, கான் மாா்க்கெட் வா்த்தகா்கள் சங்கம் சாா்பில் சந்தையில் உள்ள அனைத்து உணவு விற்பனை நிலையங்களிலும் வாக்களிக்கும் மை அடையாளத்தைக் காண்பிக்கும் குடிமக்களுக்கு 15 சதவீத தள்ளுபடியை அறிவிக்கப்பட்டுள்ளது.

கான் மாா்க்கெட்டில் தொடங்கிய சைக்கிள் பேரணி ஹுமாயூன் சாலை, பிருத்விராஜ் மாா்க், அரபிந்தோ மாா்க், லோதி சாலை, லோதி காா்டன், மேக்ஸ்முல்லா் மாா்க், சுப்ரமணியன் பாரதி மாா்க் வரையிலான 6 கிலோமீட்டா் பாதையைக் கடந்து மீண்டும் கான் மாா்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் நிறைவடைந்தது

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com