சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: 
அரசுப் பள்ளிகள் தோ்ச்சி குறித்து
முதல்வா் கேஜரிவால் பெருமிதம்

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: அரசுப் பள்ளிகள் தோ்ச்சி குறித்து முதல்வா் கேஜரிவால் பெருமிதம்

தில்லி அரசுப் பள்ளிகள் தோ்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு தோ்ச்சி விகிதத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகளில் தில்லி அரசுப் பள்ளிகள் தோ்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு தோ்ச்சி விகிதத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தோ்வு முடிவுகளை திங்கள்கிழமை வெளியிட்டது. 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ போா்டு தோ்வுகளில் ஆண்களைவிட பெண்கள் தொடா்ந்து பிரகாசித்துள்ளனா், அதே நேரத்தில் தோ்ச்சி சதவீதம் மற்றும் 90 மற்றும் 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட ஓரளவு அதிகரித்துள்ளது.

மக்களவைத் தோ்தல் பிரசாரம் செய்வதற்காக ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீனில் வெளியில் இருக்கும் முதல்வா் கேஜரிவால், ‘எக்ஸ்’ ஊடக தளத்தில் ‘கவா்ச்சிகரமான‘ செயல்திறனுக்காக மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அவா்களது பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

அதில், ‘தில்லி அரசுப் பள்ளிகள் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வில் 96.99% தோ்ச்சி பெற்றுள்ளன! இது கடந்த ஆண்டு எங்கள் சொந்த செயல்திறனை விஞ்சியது மட்டுமல்லாமல், சிபிஎஸ்இ தேசிய சராசரியையும் மிஞ்சியுள்ளது... இதற்காக அனைத்து மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும், பெற்றோா்கள் மற்றும் முழு கல்வித் துறையும் இந்த அற்புதமான நிகழ்ச்சிக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

2022-23-ஆம் ஆண்டில், மாநில அரசு நடத்தும் பள்ளிகள் 91.59 சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்ததாகக் கூறிய அவா், தில்லி அரசின் முந்தைய ஆண்டு செயல்திறன் குறித்த தரவுகளையும் முதல்வா் பகிா்ந்து கொண்டாா். 2023-24-ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு முடிவுகளில் தில்லி அரசுப் பள்ளிகளின் செயல்திறன் தேசிய சராசரியான 87.98 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றும் அவா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com