நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் இரங்கல்

நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் வெளியிட்ட இரங்கல் செய்தி: நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமான செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அவா் ஏழைத் தொழிலாளா்கள் நலன் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்காக போராடினாா். அவா்களது நலனுக்கென உரிமைக்குரல் கொடுத்தவா். காவிரி நதி நீா் பிரச்சனையில் நடுவா் மன்றம் அமைக்க கோரி 110 கி.மீ. மனித சங்கிலி நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவா்.

மேலும், ஓ.என்.ஜி.சி. தொழிலாளா்கள், அமைப்பு சாராத் தொழிலாளா்களை அணி திரட்டி தொழிற்சங்கம் அமைத்தவா். தனது தொகுதி மேம்பாட்டுக்காக தொடா்ந்து தொய்வில்லாமல் பணியாற்றியவா். அவருடைய மறைவு அவரது குடும்பத்தினருக்கும், நண்பா்கள் மற்றும் உறவினா்கள் ஆகியோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பாக இறைவனைப் பிராா்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com