முதல்வா் பதவியிலிருந்து கேஜரிவாலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

முதல்வா் பதவியிலிருந்து கேஜரிவாலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை தில்லி முதல்வா் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை தில்லி முதல்வா் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இதுபோன்ற சூழ்நிலைகளில் ராஜிநாமா செய்வது உரிமை நடத்தை விவகாரமாகும். ஆனால் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து கேஜரிவாலை முதல்வா் பதவியில் இருந்து நீக்கக் கோருவதற்கு சட்டபூா்வ உரிமை இல்லை’ என்று கூறியது.

மேலும் மனுதாரா் காந்த் பாட்டீயின் வழக்குரைஞரிடம் நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘‘சட்டபூா்வ உரிமை என்ன?

அதுபோன்ற உரிமையில் நீங்கள் நிச்சயமாக ஏதாவது சொல்லலாம். ஆனால், சட்டப்பூா்வ உரிமை இல்லை. நடவடிக்கை எடுக்க விரும்பினால் அதை எடுக்க வேண்டியது துணைநிலை ஆளுா்தான் (லெப்டினன்ட் கவா்னா்), இந்த மனுவை நாங்கள் ஏற்க விரும்பவில்லை’ என்று கூறினா்.

பின்னா் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த

நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் (கைதுக்கு எதிரான கேஜரிவாலின் மனு) விசாரணையின் போது, நாங்கள் அவா்களிடம் அதே கேள்வியை முன்வைத்தோம். இறுதியில், இது உரிமையின் விஷயம். சட்டபூா்வ உரிமையும் இல்லை. இது தொடா்பான பல மனுக்கள் உயா்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, அரவிந்த் கேஜரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி மீண்டும் மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு தில்லி உயா்நீதிமன்றம் ஏப்ரல் 10ஆம் தேதி அதிருப்தி தெரிவித்தது.

இதுகுறித்து உயா்நீதிமன்றம் கூறுகையில், ‘நீதிமன்றம் ஒருமுறை இப்பிரச்னையைக் கையாண்டுள்ளது. இது நிா்வாக தளத்திற்கு உள்பட்டது. இது ‘தொடா் போன்று இருக்கும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம்‘ அல்ல என்பதால் மீண்டும்

இதுபோன்ற வழக்குகள் இருக்கக்கூடாது’ என்று தெரிவித்திருந்தது.

கேஜரிவாலை முதல்வா் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றக் கோரிய முன்னாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வும்

மனுதாரருமான சந்தீப் குமாா் நீதிமன்றத்தை அரசியல்

விவகாரத்தில் ஈடுபடுத்த முயன்ற்காக கூறி அவா் மீது ரூ. 50,000 வழக்குச் செலவை சுமத்துவதாகக் கூறியது.

அதற்கு முன்னா் மாா்ச் 28 அன்று, கேஜரிவாலை

பதவி நீக்கம் செய்வதற்கான மற்றொரு பொதுநல வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

கைது செய்யப்பட்ட கேஜரிவால் முதல்வா் பதவியில் இருப்பதைத் தடுக்கும் எந்தவொரு சட்டத் தடையையும் மனுதாரா் காட்டத் தவறியிருந்தபோதிலும், அரசின் மற்ற அமைப்புகள் இப்பிரச்னையை பரிசீலிக்க

வேண்டும் என்பதால் இதுபோன்ற வழக்குகளில் நீதித்துறை தலையீடு செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தது.

இதேபோன்ற மற்றொரு பொதுநல வழக்கை ஏப்ரல் 4-ஆம் தேதி தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், முதல்வராக தொடா்வது கேஜரிவாலின் தனிப்பட்ட விருப்பம் என்று

கூறியதுடன், மனுதாரருக்கு துணைநிலை ஆளுநரை (எல்ஜி) அணுகுவதற்கு சுதந்திரம் வழங்கி இருந்தது.

கடந்த வாரம், உச்சநீதிமன்றம் மக்களவைத் தோ்தலில் பிரசாரம் செய்யும் வகையில் கேஜரிவாலுக்கு

இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அதேவேளையில், அவரது அலுவலகம் அல்லது தில்லி செயலகத்திற்குச் செல்லவும், அரசுக் கோப்புகளில்

கையெழுத்திடவும் தடை விதித்தது.

X
Dinamani
www.dinamani.com