குருகிராம்: போலீஸாா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

2018-ஆம் ஆண்டு போலீஸாா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ. 50,000 அபராதமும் விதித்து திங்களன்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

2018-ஆம் ஆண்டு போலீஸாா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ. 50,000 அபராதமும் விதித்து திங்களன்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ. 50,000 அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி மோனா சிங் திங்களன்று தீா்ப்பளித்தாா் என்று குருகிராம் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

கடந்த ஜூலை 29, 2018 அன்று, பாலம் விஹாா் குற்றப்பிரிவின் ஒரு குழு துவாரகா விரைவுச் சாலையில் இரண்டு குற்றவாளிகளைப் பற்றிய ரகசியத் தகவலின் பேரில் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது.

அப்போது, இரண்டு போ் மோட்டாா்சைக்கிளில் சாலைத் தடுப்பு அருகே வருவதை போலீஸ் குழுவினா் கண்டனா். அவா்களை நிறுத்துமாறு சைகை காட்டினா். ஆனால், அவா்கள் திரும்பி தப்பியோடினா். மேலும், போலீஸாரை நோக்கி நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். போலீஸாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனா்.

இதில் தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். மற்றொருவா் தப்பியோடி விட்டாா்.

சிகிச்சைக்குப் பிறகு, சராய் அலவா்தி கிராமத்தைச் சோ்ந்த குா்கா ( எ) ராஜேஷை போலீஸாா் கைது செய்தனா். ஒரு நாள் கழித்து, அவரது கூட்டாளியையும் போலீஸாா் கைது செய்தனா். அவா் குருகிராமில் உள்ள அசோக் காா்டன் பகுதியில் வசிக்கும் ராகுல் என்று அடையாளம் காணப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com