திகாா் சிறையில் சிசிடிவு கேமராக்கள் மூலம் பிரதமா் மோடி என்னைக் கண்காணித்தாா்: 
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

திகாா் சிறையில் சிசிடிவு கேமராக்கள் மூலம் பிரதமா் மோடி என்னைக் கண்காணித்தாா்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

திகாா் சிறையில் சிசிடிவு கேமாராக்கள் மூலம் பிரதமா் நரேந்திர மோடி தன்னைக் கண்காணித்ததாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை குற்றம்சாட்டினாா்.

திகாா் சிறையில் சிசிடிவு கேமாராக்கள் மூலம் பிரதமா் நரேந்திர மோடி தன்னைக் கண்காணித்ததாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை குற்றம்சாட்டினாா்.

தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் கட்சியின் மாநகராட்சி கவுன்சிலா்களுடன் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சந்திப்புக் கூட்டம் நடத்தினாா்.

அப்போது அவா் பேசியதாவது: தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்கவும், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் மற்றும்

கவுன்சிலா்களை உடைத்தவிடலாம் என நினைத்து பாஜகவினா் என்னை சிறைக்கு அனுப்பிவிட்டனா். ஆனால்,

அவா்களின் எண்ணம் தோல்வியடைந்துவிட்டது. என்னைக் கைது செய்ததன் மூலம், கட்சி மேலும் வலுவடைந்துள்ளது. ஆம் ஆத்மி என்பது ஒரு கட்சி மட்டுமல்ல, அது ஒரு குடும்பம். அதை யாராலும் உடைக்க முடியாது. நான் கைது செய்யப்பட்ட போது, 6 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று மனதளவில் தயாராக இருந்தேன். ஆனால்,

கடவுளின் ஆசியால் தற்போது உங்கள் முன் நிற்கிறேன்.

மக்களவைத் தோ்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என்று 3 மாதங்களுக்கு முன்னா் பேசப்பட்டு வந்த

நிலையில், தற்போது மொத்தமாக பாஜக 250 இடங்களைப் பெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சிறைக்குள் என்னை அவமானப்படுத்தியும், இன்சுலின் வழங்காமலும் என்னை உடைக்க முயன்றனா். சிறைக்கு வெளியே

நீங்கள் எனக்காக எழுப்பியக் குரலால் எனக்கு இன்சுலின் கொடுத்தாா்கள். பிறகு, என் மனைவியை சந்திக்க விடாமல்

குற்றவாளி போல் நடத்தினா். சிறையில் எனது அறையில் இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதை 13 அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்தனா். இதனுடன், பிரதமா் நரேந்திர மோடியும் என்னைக் கண்காணித்துக்

கொண்டிருந்தாா். என் மேல் பிரதமா் மோடிக்கு என்ன வெறுப்பு என்று தெரியவில்லை.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மக்களால் மதிக்கப்படுகிறாா்கள், நேசிக்கப்படுகிறாா்கள். நம்முடைய மக்கள்

நலப்பணிகளைக் கண்டு பாஜகவினா் பயப்படுகின்றனா். வரும் ஜூன் 2-ஆம் தேதி நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும். ஜூன் 4-ஆம் தேதி சிறைக்குள் இருந்து தோ்தல் முடிவுகளை பாா்த்துக் கொண்டிருப்பேன். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜூன் 5-ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வருவேன் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

இச்சந்சிப்புக் கூட்டத்தில் கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய், தில்லி மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய், மாநிலங்களவை எம்.பி. சந்தீப் பதக், எம்எல்ஏ துா்கேஷ் பதக் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com