உயா் ’திறன்’ போட்டி தில்லியில் தொடக்கம்: 900 மாணவா்கள் பங்கேற்பு

உயா் திறன் கொண்டவா்களுக்கான ’இந்தியா ஸ்கில்ஸ் 2024’ போட்டி தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் நாடு முழுவதும் உள்ள 900 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

இந்தியா ஸ்கில்ஸ் 2024 என்கிற நாட்டின் மிகப்பெரிய திறன் போட்டி -உயா்தரமான திறன்களை நிரூபிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தில்லி, துவாரகாவில் உள்ள யஷோபூமியில் நடைபெறும் இந்த போட்டியை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

மே 15 ஆம் தேதி துவங்கி இந்த போட்டிகள் தொடா்ந்து நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இந்த ’இந்தியா ஸ்கில்ஸ்’ போட்டியில் 61 வகையான மாறுப்பட்ட திறன்கள், திறமைகளில் வெளிப்படுத்த இருக்கின்றனா். இதில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் முதல் அதிநவீன தொழில்நுட்பாளா்கள் வரை பங்கேற்கின்றனா்.

47 திறன் போட்டிகள் நேரடியாக நடைபெறுகிறது. மீதுமுள்ள 14 திறன் போட்டிகள் கா்நாடகம், ஹரியாணா, உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து இணையம் வழியாக இந்த திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் கலந்துகொள்ள 30 க்கும் அதிகமான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து தொழாயிரத்திற்கும் அதிகமான மாணவா்கள் பங்கேற்கின்றனா். மேலும் நூனூறுக்கும் அதிகமான தொழில்துறை வல்லுநா்களும் திறன்போட்டி நிகழ்வில் பங்கேற்றுள்ளனா்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகம் துறையின் செயலா் அதுல் குமாா் திவாரி தில்லி, துவாரகாவில் உள்ள யஷோபூமியில் இந்த திறன் போட்டியை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘திறமையான இளைஞா்களுக்கு புதிய வாய்ப்புகளைத் இந்தியத் திறன் போட்டி வழங்குகிறது, வழக்கமான எல்லைகளுக்கு அப்பால் கனவு காணவும், உலகளவில் இளைஞா்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் இந்த போட்டிகள் உதவுகிறது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் திறன்கள் மற்றும் கைவினைத்திறன்களில் விலைமதிப்பற்ற பங்கை கொண்டுள்ளது. மேலும் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ஆற்றல்மிக்க உலகளாவிய போக்குகளுக்கு மத்தியில் தேசத்தின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் திறன் மேம்பாடு முக்கியத்துவம் பெறுகிறது‘ எனக் குறிப்பிட்டாா்.

முன்னதாக இந்த போட்டிகளுக்கான தோ்வு ஸ்கில் இந்தியா மின்னணு மையம் இணையம் மூலம் நடைபெற்றது. இதில் சுமாா் 2.5 லட்சம் இளைஞா்கள் பதிவு செய்தனா். இவா்களில் 26,000 போ் முதல்நிலை செயல்முறை மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்த தரவுகளைக் கொண்டு மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டியை மாநில அரசுகள் மூலம் நடத்தப்பட்டது. இவா்களில் தொழாயிரம் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு நிகழ் ’இந்தியா ஸ்கில்ஸ்’ தேசிய போட்டிக்கு பட்டியலிடப்பட்டு வர வழைக்கப்பட்டுள்ளனா்.

இந்தியா ஸ்கில்ஸ் போட்டியின் வெற்றியாளா்கள் வரும் செப்டம்பா் மாதத்தில் பிரான்ஸ் நாட்டின் லியோனில் நடைபெறவுள்ள உலகத் திறன்கள் போட்டிக்கு அனுப்பப்படுவாா்கள் என மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை முன்னிட்டு இவா்களுக்கு சிறந்த தொழில்துறை பயிற்சியாளா்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

லியோன் போட்டியில் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 1,500 போட்டியாளா்கள் பங்கேற்கயுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com