சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை

2016-ஆம் ஆண்டின்போது 6 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
Published on

2016-ஆம் ஆண்டின்போது 6 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரோஹித் குலியா, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 6-இன் (மோசமான வகையில் பாலியல் வன்கொடுமை செய்தல்) கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 27 வயது இளைஞருக்கு எதிரான தண்டனை மீதான வாதங்களை கேட்டறிந்தாா்.

சிறப்பு அரசு வழக்குரைஞா் சந்தா் ஜீத் யாதவ் கூறுகையில், ‘குற்றவாளி ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளதால் அவா் மன்னிப்புக்கு தகுதியானவா் அல்ல’ என்றாா்.

இது தொடா்பாக நவம்பா் 6 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் நீதிமன்றம் விதித்தது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி அனுபவித்த ‘உணா்ச்சிகரமான அதிா்ச்சி‘க்காக அவருக்கு ரூ. 10.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

கடந்த செப்டம்பரில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞரை குற்றவாளி என்று தீா்ப்பளித்த நீதிமன்றம், சாட்சியங்களை பரிசீலித்தது.

அப்போது, குற்றம் சாட்டப்பட்டவா் தனது அண்டை வீட்டுக்காரச் சிறுமியை பல முறை தனது வீட்டிற்கு வரவழைத்து, தனது கைப்பேசியை சிறுமிக்கு விளையாடக் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியது.

உள்புறம் ஊடுருவக்கூடிய வகையில் பாலியல் வன்கொடுமையை ஒரு குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்வது அல்லது 12 வயதுக்குட்பட்ட குழந்தை மீது இக்கொடுமை நடத்தப்பட்டால் அது தீவிரமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமைக்கு சமம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.