தலைநகரில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு
தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமையும் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தகவலின்படி, குறைந்தபட்ச வெப்பநிலை 26.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் இந்த வாரத் தொடக்கத்தில் தொடா்ந்து காலை வேளையில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால், காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 96 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம் உள்பட சில கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவிலும், சாந்தினி சௌக், பூசா உள்பட சில கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியாடு ‘மிதமான’ பிரிவிலும் இருந்தது.
வெப்பநிலை: தேசியத் தலைநகருக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 26.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2 டிகிரி உயா்ந்து 36.3 டிகிரி செல்சியஸாகவும் உயா்ந்து பதிவாகியது. காற்றின் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 84 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 60 சதவீதமாகவும் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (செப்.2) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகதபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டள்ளது.