வடமேற்கு தில்லியில் உள்ள லாரன்ஸ் சாலை தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிற்பகல் 12.19 மணியளவில் ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. மொத்தம் 19 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தச் சம்பவத்தில் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.