போலீஸ், ராணுவ வீரா் போல நடித்து பெண்ணிடம் கொள்ளையடித்த இருவா் கைது

காவல்துறை மற்றும் ராணுவ வீரா் போல நடித்து பெண்ணிடம் கொள்ளையடித்த இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
Published on

காவல்துறை மற்றும் ராணுவ வீரா் போல நடித்து பெண்ணிடம் கொள்ளையடித்த இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் முகமது ஷாருக் (28) மற்றும் சதீஷ் ஜெய்ஸ்வால் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இந்த மோசடி தொடா்பாக பெண் ஒருவா் கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி, கமலா மாா்க்கெட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்தப் பெண் ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாா். காரில் வந்த குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் அந்தப் பெண்ணை அணுகி கபஷேரா செல்வதற்கு வழி கேட்டாா்.. மேலும் பேருந்து நிறுத்தத்தில் நின்ற மற்றொரு குற்றவாளி தனக்கு வழி தெரியும் என்று பதிலளித்துள்ளாா். இதைத் தொடா்ந்து அந்த நபா் அந்தக் காரில் ஏறினாா்.

குற்றம் சாட்டப்பட்ட நபா்கள், போலீஸ் மற்றும் ராணுவ வீரா்கள் போல் நடித்து புகாா்தாரரை கபஷேரா எல்லை வரை இலவச சவாரிக்காக காரில் ஏறும்படி வற்புறுத்தினா். அப்போது, அவரிடம் இருந்த ஏடிஎம் காா்டை அவா்கள் கொள்ளையடித்து சென்றனா். அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சரிபாா்த்து, காரின் உரிமையாளள் கண்காணிக்கப்பட்டு வருகிறாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com