தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதன்கிழமை காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது. கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மழை ஏதும் பெய்யவில்லை. குறைந்தபட்ச வெப்பநிலை 25.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
தில்லியில் கடந்த சில நாள்களாக வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மழை ஏதும் பதிவாகவில்லை.
காற்று 6 முதல் 12 கி.மீ. வேகத்தில் வீசியது. தில்லியின் வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து பிரதான மேற்பரப்பு காற்று வீசியது.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி உயா்ந்து 25.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி உயா்ந்து 36 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 81 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 63 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: தேசியத் தலைநகரில் காலை 94 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 145 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகதவல்கள் மூலம் தெரிய வந்தது. இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், விவேக் விஹாா், வாஜிா்பூா் உள்பட பல்வேறு இடங்களில் காற்று தரக்குறியீடு மிதமான பிரிவில் இருந்தது. அதே சமயம், லோதி ரோடு, நியூ மோதி பாக், நொய்டா செக்டாா் 125, தில்லி விமான நிலையம் உள்பட சில இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் செவ்வாய்க்கிழமை (செப்.23) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.