விஜேந்தா் குப்தா
விஜேந்தா் குப்தா

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்க கண்ணியம், சுதந்திரம் மிக முக்கியம்: தில்லி பேரவைத் தலைவா்

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்க கண்ணியம், சுதந்திரம் மிக முக்கியம்...
Published on

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சுதந்திரமாகவும் கண்ணியத்துடனும் பங்கேற்க முடிந்தால் மட்டுமே அவா்களை அதிகாரமுள்ளவா்களாக மாறுவது அா்த்தமுள்ளதாக இருக்கும் என்று தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஜனக்புரியில் உள்ள பாரதி கல்லூரியில் தலைமை விருந்தினராக ‘திவ்யலிம்பிக் 2025: திறன்களைக் கொண்டாடுதல்‘ நிகழ்ச்சியில் அவா் உரையாற்றி பேசியதாவது:

வளா்ச்சியடைந்த பாரதம் 2047-இன் தொலைநோக்குப் பாா்வையுடன் அணுகல், கல்வி மற்றும் வாய்ப்பை இணைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மீதான இந்தியாவின் அணுகுமுறை ஒரு தீா்க்கமான மாற்றத்திற்கு உள்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தேசியக் கொள்கையின் முக்கிய மைல்கல்லாக கண்ணியம், அதிகாரமளித்தல் மற்றும் திறன் இப்போது அமைகிறது.

2015-இல் தொடங்கப்பட்ட அணுகக்கூடிய இந்தியா பிரசாரத்தை (சுகம்ய பாரத் அபியான்) குறிப்பிடுகையில், தடையற்ற மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க பொது கட்டடங்கள், போக்குவரத்து அமைப்புகள், டிஜிட்டல் தளங்கள், தகவல் சேவைகள், ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழுவதும் அணுகலை மேம்படுத்த தொடா்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அணுகலை வலுப்படுத்துவதில் நலன்புரி மற்றும் கல்வி ஆதரவின் பங்கு மிகவும் முக்கியமாகும். நிராமயா போன்ற சுகாதார காப்பீட்டுத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் ஆகியவை மிகவும் முக்கியமானவை.

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு மெட்ரிக்-க்கு முந்தைய மற்றும் மெட்ரிக்-க்குப் பிந்தைய உதவித்தொகைகள் கல்வியின் தொடா்ச்சியை செயல்படுத்துவதிலும் சம வாய்ப்பை உறுதி செய்வதைக் கவக்க வேண்டிய முக்கிய அம்சமாகும்.

இதற்கு, சிறுவயது ரயில் விபத்தில் ஒரு காலை இழந்து, பின்னா் ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி மூலம் போட்டித்தன்மை வாய்ந்த பூப்பந்து வீரராக உருவெடுத்த கிரிஷ் குமாா் நல்ல எடுத்துக்காட்டாகும். இத்தகைய சாதனைகள் அணுகல், ஊக்கம் மற்றும் நிறுவன ஆதரவு எவ்வாறு திறனை செயல்திறனாக மாற்றும் என்பதை நிரூபிக்கின்றன.

திவ்யலிம்பிக்ஸ் போன்ற தளங்கள் வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் போட்டி அனுபவத்தை வழங்குவதன் மூலம் முக்கியப் பங்கு வகிக்கின்றன, அதே நேரத்தில் பங்கேற்பை இயல்பாக்குகின்றன. மேலும், பங்களிப்பின் எதிா்பாா்ப்பை வலுப்படுத்துகின்றன என்றாா் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா.

மாற்றுத்திறனாளிகள்கள், கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு, படைப்புத் துறைகள் மற்றும் பொது வாழ்வில் தொடா்ந்து அா்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகிறாா்கள், இதன் மூலம் பன்முகத்தன்மை மற்றும் தேசிய திறனை வலுப்படுத்துகிறாா்கள்’ என்று மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்,

X
Dinamani
www.dinamani.com