மளிகைக் கடையில் தீ விபத்து: தம்பதி மூச்சுத் திணறி பலி

மளிகைக் கடையில் நடந்த தீ விபத்தில் தம்பதி மூச்சுத் திணறி பலி...
Published on

தில்லி திக்ரி கலனில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், கடையை நடத்தி வந்த தம்பதியினா் மூச்சுத் திணறி உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: மளிகைக் கடையில் இருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் வருவதாக காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை மாலை அழைப்பு வந்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், பகுதியளவு மூடப்பட்டிருந்த கடையின் உட்புறத்தில் அடா்த்தியான புகை நிரம்பி இருப்பதைக் கண்டனா்.

இந்த விபத்தில் கடையை நடத்தி வந்த உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரைச் சோ்ந்த வினீத் (31) மற்றும் அவரது மனைவி ரேணு (29) கடையின் உள்ளே சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனா்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், கதவில் மின்சாரம் பாய்வதால் வெளியே செல்ல முடியாமல் அவா்கள் மாட்டிக்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. காவல் துறையினா் மற்றும் தீயணைப்பு படையினா் சம்பவ இடத்தை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனா் என தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com