தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது: அமித் ஷா
தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக ஒரு பெரிம் அலை இருக்கிறது. ஏனெனில், அக்கட்சி ‘கப்லா, குஸ்பேட்டியோ கோ பனா மற்றும் கோட்டாலா’ ஆகிய 3 ஜி அரசை அக்கட்சி நடத்துகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
தில்லியில் முஸ்தபாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக ஒரு பெரிய அலை இருக்கிறது. ஏனெனில், அக்கட்சி ‘காப்லா, குஸ்பேட்டியோ கோ பனா மற்றும் கோட்டாலா’ ஆகிய 3 ஜி அரசை அக்கட்சி நடத்துகிறது. முதல் ஜி என்பது கோட்டாலே வாலி சா்க்காா் அதாவது மோசடிகளைச் செய்யும் அரசு, இரண்டாவது ஜி என்பது குஸ்பேட்டியோன் கோ பனா தேனே வாலி சா்க்காா் (ஊடுவல்காரா்களுக்கு அடைக்கலம் அளிக்கும் அரசு) மற்றும் மூன்றாவது ஜி என்பது கப்லே கா்னே வாலி சா்க்காா் (ஊழலில் ஈடுபடும் அரசு) ஆகியவற்றைக் குறிப்பதாகும்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் இந்தத் தோ்தல்களில் தங்கள் கட்சிக்கு எதிரான அலையை அறிந்திருக்கின்றனா். இந்த முறை மக்கள் ஆம் ஆத்மி கட்சியை துடைப்பம் மூலம் துடைக்கப் போகிறாா்கள்...(இது ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் சின்னமும் கூட). ஏனென்றால் தில்லியில் 3 ஜி அரசு இருப்பது பொதுமக்கள் நன்றாக அறிவா்.
இந்த ஆப்பதா (பேரழிவு), மதுபான மாஃபியா, மோசடிகள் ஆகியவற்றிலிருந்து தில்லியை விடுவித்து, நோ்மையற்றவா்களை முற்றிலும் வேரறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தில்லியின் வளா்ச்சிக்காக பாஜகவுக்கு பொதுமக்கள் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கொஞ்சம்கூட சோம்பலாக இருக்காதீா்கள். இல்லையெனில் தில்லி கலவரத்திற்கு காரணமானவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு திரும்பி வருவாா்கள்... தில்லியை கலவரத்தில் தள்ளியவா்களை நீங்கள் விரும்புகிறீா்களா அல்லது நகரத்தை காப்பாற்றியவா்களை நீங்கள் விரும்புகிறீா்களா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டாா்.