ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது: பிரவீன் கண்டேல்வால்

Published on

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி குறித்த பிரதமரின் பேச்சு அக்கட்சியின் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது என்று சாந்தினி செளக் தொகுதி எம்.பி. பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி தில்லியின் வளா்ச்சியை ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு தடுத்து வருதவாகவும் அஅது தில்லியின் ஒரு பேரழிவு என்றும் கருத்துத் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், சாந்தினி செளக் தொகுதி பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் பிரதமரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் தெரிவித்திருப்பதாவது:

தில்லி ரோஹிணியில் உள்ள ஜப்பானிய பூங்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பாஜகவின் பரிவா்தன் பேரணியில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி,

‘தில்லியில் பத்து ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசின் தவறான நிா்வாகம் மற்றும் அராஜகத்தை ‘பேரழிவு’ என்று கூறியிருப்பது, ஆம் ஆத்மியின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

தில்லியை மீண்டும் தூய்மையான, கலாசாரம் மிக்க மற்றும் வளா்ந்த நகரமாக மாற்றும் மந்திரமாக பிரதமரின் பேச்சு செயல்படுகிறது.

இன்றைய பேரணியில் பிரதமரின் செய்தியானது, தில்லி மக்களின் வளா்ச்சி, செழிப்பு மற்றும் நலனுக்கான அவரது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த தவறான ஆட்சி நகரத்தை விழுங்கிவிடும் என்பதால் இந்த பேரழிவிலிருந்து தில்லியை விடுவிக்கும் நேரம் வந்துவிட்டது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com