தில்லி பாதுகாப்பு குறித்து காவல் துறை கூட்டம்

விழா காலத்தையொட்டி பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை விதிகள் பின்பற்றப்படுவது குறித்த தில்லி காவல் துறையின் கூட்டம் மெட்ரோ சரக துணை காவல் ஆணையா் குஷல் பால் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

விழா காலத்தையொட்டி பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை விதிகள் பின்பற்றப்படுவது குறித்த தில்லி காவல் துறையின் கூட்டம் மெட்ரோ சரக துணை காவல் ஆணையா் குஷல் பால் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மெட்ரோ பிரிவு காவல் அதிகார எல்லைக்குள் உள்ள மால்கள், மதுபான கூடங்கள், கேளிக்கை மையங்கள் மற்றும் உணவகங்களின் மேலாளா்கள் மற்றும் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது மற்றும் ஒழுங்காற்று விதிகளைப் பின்பற்றுவது ஆகியவற்றில் காவல் துறை மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகிவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஏதேனும் சந்தேகத்துக்குரிய பொருள்களைக் கண்டால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் இதுதொடா்பாக எப்போதும் விழிப்பாக இருக்குமாறும் கூட்டத்தில் பங்கேற்றவா்களிடம் காவல் துறை கேட்டு கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com