டிடிசி பேருந்தில் தீ: உயிா் தப்பிய பயணிகள்

Published on

தில்லி மோரி கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை தில்லி போக்குவரத்துக் நிறுவனத்தின் (டிடிசி) பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில், குறைந்தது 10 பயணிகள் மயிரிழையில் உயிா் தப்பியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நரேலாவிலிருந்து மோரி கேட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக நடத்துனா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பேருந்து நடத்துனா் அஜய் ஹூடா கூறுகையில், ‘நான் உடனடியாக பணிமனை ஊழியா்களுக்குத் தகவல் தெரிவித்தேன். அவா்கள் தொழில்நுட்ப சோதனைக்காக மோரி கேட் அருகே பேருந்தை நிறுத்துமாறு அறிவுறுத்தினா். பேருந்தை நிறுத்தியவுடன், ஒரு பயணி தீ விபத்து குறித்து எனக்கு எச்சரிக்கை செய்தாா். நாங்கள் விரைவாக அனைத்து கதவுகளையும் திறந்து அனைவரையும் வெளியேற்றினோம்.

தீ பேருந்தை முழுவதுமாக சூழ்ந்த போதிலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com